பிரிந்து போக துடிக்கும் உறவுக்காக
பிரிய நினைக்கிறாய் என்னை விட்டு
ஆனால் உன் மனம் உன்னை தடுக்கிறது
பிரிந்து போ நீ என் மீது வைத்த பாசம்
பொய்யானது என்றால் .....
கழட்டி விடும் செருப்பல்ல காதல்
தேய்ந்தவுடன் புது செருப்பு வாங்குவது போல
காதலையும் வாங்கிவிடாதே
உண்மையான காதல் உன் மனதில் இருந்தால்
உன்னால் காதலிக்கப்பட்ட அந்த பெண்ணை
பாதியில் நீ பரிதவிக்க விட்டு போவது தான்
காதல் என்றால் நீ ஏன் காதலிக்கிறாய்...
காதலுக்காக எதையும் இழக்கலாம்
ஆனால் எதுக்காகவும் உன் காதலை இழக்காதே